சேலம் அருகே தாறுமாறாக சென்ற கார் ஒன்று ஸ்கூட்டரின் பக்கவாட்டில் மோதி விபத்து ; 2 இளைஞர்கள் படுகாயம்
சேலம் அருகே நெடுஞ்சாலையில் தாறுமாறாகச் சென்ற கார் ஒன்று முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் மோதி தூக்கி வீசும் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்தும் அருணும் ஸ்கூட்டர் ஒன்றில் பழனி சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். சேலம் காளி கவுண்டம்பாளையம் அருகே தாறுமாறாக வந்த ஹூண்டாய் கார் ஒன்று, இரண்டு வாகனங்களுக்கும் நடுவில் நுழைய முயன்று ஸ்கூட்டரின் பக்கவாட்டில் மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட ஸ்கூட்டர் குட்டிக் கரணம் அடிக்க, அருணும் அஜித்தும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். பதைபதைக்க வைக்கும் இந்தக் காட்சிகள் பின்னால் வந்த ஒரு காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அந்தக் கார் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments