முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போக்குவரத்துத்துறை ஆய்வுக் கூட்டம் ; 10 ஆண்டு திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை

0 2964
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போக்குவரத்துத்துறை ஆய்வுக் கூட்டம்

பொது மக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவை மற்றும் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

போக்குவரத்துத் துறை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அத்துறையின் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அடுத்த 10 ஆண்டுகளில் போக்கு வரத்துத் துறையில் செயல்படுத்த உத்தேசித்துள்ள திட்டங்கள் குறித்து, இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அரசு பேருந்துகளின் பராமரிப்பை மேம்படுத்தி, வழித் தடங்களை மறு ஆய்வு செய்யுமாறு, அதிகாரிகளை, மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

டீசலுக்கு பதிலாக மாற்று எரிசக்தி மூலம் அரசு பேருந்துகளை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும், இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments