எதிரிகள் தடுக்க முடியாத அளவுக்கு திருப்பித் தாக்கும் வல்லமை ரஷ்ய கடற்படைக்கு உள்ளது - ரஷ்ய அதிபர் புதின்

0 4094
எதிரிகள் தடுக்க முடியாத அளவுக்கு திருப்பித் தாக்கும் வல்லமை ரஷ்ய கடற்படைக்கு உள்ளது

எதிரிகளின் எந்த விதமான தாக்குதலையும் கண்டறிந்து, எதிரிகள் தடுக்க முடியாத அளவுக்கு திருப்பித் தாக்கும் வல்லமை ரஷ்ய கடற்படைக்கு உள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் (Putin)தெரிவித்துள்ளார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்-ல் (Saint Petersburg)நட்பு நாடுகள் கலந்துகொண்ட கப்பல்படை அணிவகுப்பு விழாவில் அதிபர் புதின்  கலந்துக்கொண்டார்.நீர்மூழ்கி கப்பல் மற்றும் இந்தியா உட்பட இதர நாடுகளின் போர் கப்பல்களின் அணிவகுப்பை புதின் பார்வையிட்டார்.

பிறகு பேசிய புதின், கடலுக்கு அடியில், கடலுக்கு மேல் அல்லது வான்வழி என்று எப்படி தாக்குதல் நடத்தினாலும், அதை கண்டறிந்து , தேவைப்பட்டால், எதிரிகள் தடுக்க முடியாத அளவுக்கு திருப்பி தாக்கும் வல்லமை ரஷ்ய கடற்படைக்கு உள்ளதாக எச்சரித்தார்.

சில வாரங்களுக்கு முன்பு பிரிட்டனுக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று சர்ச்சைக்குரிய கிரைமியா (Crimea) தீபகற்பத்தை கடந்து சென்ற நிலையில், அதிபர் புதின் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments