சர்கார் பட விவகாரத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்

0 4450
சர்கார் பட விவகாரத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து

சர்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சித்தாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் 2018-ல் வெளியான சர்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைத்த புகாரில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஏ.ஆர்.முருகதாஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, தணிக்கை முடிந்த திரைப்படம் குறித்து தனி நபரோ, அரசோ கேள்வி எழுப்பவோ அல்லது வழக்கு பதிவு செய்யவோ முடியாது என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவை சுட்டிகாட்டியதோடு, அரசியலமைப்பு வழங்கிய பேச்சுரிமைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்வதாக கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments