காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 1,970 சதுர அடி நிலம் மீட்பு -அமைச்சர் சேகர்பாபு தகவல்
சென்னை - கீழ்ப்பாக்கத்தில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ஆயிரத்து 970 சதுர அடி நிலம் மீட்கப்பட்டு உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட மீட்பு பணியை நேரில் பார்வையிட்ட அத்துறையின் அமைச்சர் சேகர் பாபு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இதுவரை, 600 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளது என்றார். ஆக்கிரமிப்பாளர்கள், தாமாக முன்வந்து கோவில் நிலங்களை அரசிடம் ஒப்படைக்க முன்வருமாறு, அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, சென்னை - தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, திருச்சி, திருச்செங்கோடு, திருத்தணி, திருக்கழுக்குன்றம் மற்றும் சோளிங்கர் ஆகிய 5 முக்கிய மலை கோவில்களில் " ரோப் கார் " வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார்.
பக்தர்களுக்கு கூடுதல் வசதி கிடைக்கும் வகையில் திருச்செந்தூர், சோளிங்கர், மருதமலை உள்ளிட்ட சில கோவில்கள் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் தேவையான வசதிகள் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
Comments