மாநில வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை முறையாக வகுத்துக் கண்காணிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

0 2172
மாநில வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை முறையாக வகுத்துக் கண்காணிக்க வேண்டும்

மாநில வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை முறையாக வகுத்துக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் பணிகள், செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

அப்போது பலதுறைச் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததுடன், அரசின் நிதி ஒதுக்கீடுகள் அதிகபட்ச மக்களுக்குச் சென்றடையும் வகையில் திட்டங்களைத் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மாநிலத்திற்கான பிரத்யேகமாக நிகழ்தரவு (Real Time Data) ஒன்றை நிறுவுமாறும் அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பழனிவேல் தியாகராஜன், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments