மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க மத்திய அரசிடம் பரிந்துரை - தமிழக அரசு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளதாகவும், எய்ம்ஸ் நிர்வாகத்தின் முடிவின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக சுகாதாரத்துறை செயலர் பதில்மனுவை தாக்கல் செய்தார். அதில், முதற்கட்டமாக 50 மாணவர்களை எய்ம்சில் சேர்ப்பது குறித்து மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும், புதிதாக சேர்க்கப்படும் மாணவர்கள் அருகிலிருக்கும் மதுரை, தேனி, சிவகங்கை மருத்துவ கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவர் எனவும், அதற்கான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசு தயாராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதிகள், 2 நாட்களுக்குள்ளாக தமிழக அரசின் பதில் மனுவை மத்திய அரசு வழக்கறிஞருக்கு வழங்கவும், மத்திய அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Comments