காவலர் தேர்வுக்கு வந்திருந்த இளைஞர் மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. மகனின் உடலைக் கட்டியணைத்து கதறிய தந்தை

0 4166
விருதுநகரில் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வில் கலந்து கொள்ள வந்த இளைஞர் ஒருவர், மைதானத்தில் ஓடிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து இறந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

விருதுநகரில் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வில் கலந்து கொள்ள வந்த இளைஞர் ஒருவர், மைதானத்தில் ஓடிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து இறந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர்கள், தீயணைப்பாளர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

விருதுநகரிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற உடற்கூறு தேர்வில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு, ஓட்ட சோதனை போன்றவை நடத்தப்பட்டன.

இதில் கலந்துகொண்ட விருதுநகர் அழகாபுரியைச் சேர்ந்த மாரிமுத்து என்ற இளைஞர், 1500 மீட்டர் ஓட்ட சோதனையின்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மாரிமுத்துவின் உடலை கட்டியணைத்து அவரது தந்தை சங்கரராஜ் கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments