மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீடு கோரிய வழக்கு ; மத்திய அரசு பதிலளிக்க மேலும் ஒருவார கால அவகாசம்

0 3297
மத்திய அரசு பதிலளிக்க மேலும் ஒருவார கால அவகாசம்

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பதிலளிக்க மத்திய அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் மேலும் ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக்கோரித் தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் தொடுத்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தக் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது.

நடைமுறைப்படுத்தாததால் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு கோரியதை ஏற்று ஒரு வாரக் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments