அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம் ; இன்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

0 3917
அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது.

தமிழ்நாடு முழுவதும் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், இக்கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று முதல் ஆகஸ்டு 10ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் tngasa.org மற்றும் tngasa.in ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குநர் பூரணச்சந்திரன் அறிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments