தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு : தேர்தல் ஆணையமும் தேர்தல் அதிகாரிகளும் 4 வாரங்களில் பதிலளிக்க நீதிபதி உத்தரவு
தேர்தல் வழக்குகளில் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விராலிமலைத் தொகுதியில் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பனும், காட்பாடி தொகுதியில் துரைமுருகன் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராமுவும் வழக்குத் தொடுத்துள்ளார்.
பெருந்துறை தொகுதியில் அதிமுகவின் ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் பாலு வழக்குத் தொடுத்துள்ளார்.
வாக்காளர்களுக்குப் பரிசு, பணம் வழங்கல், கூடுதல் செலவு, தகுதியான வாக்குகள் நிராகரிப்பு, மறு எண்ணிக்கைக்கு மறுத்தது உள்ளிட்ட காரணங்களால் மூவரின் வெற்றியையும் செல்லாது என அறிவிக்கக் கோரியுள்ளனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், தேர்தல் ஆணையமும் தேர்தல் அதிகாரிகளும் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் ஆறாம் நாளுக்குத் தள்ளி வைத்தார்.
Comments