புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்த ராகுல் காந்தி..
புதிய வேளாண் சட்டங்களுக்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு டிராக்டரை ஓட்டி வந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, விவசாயிகளின் குரலை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கும் வகையிலேயே தாம் டிராக்டரில் வந்ததாக தெரிவித்தார்.
விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்களின் எதிர்ப்புக் குரல்கள் ஒடுக்கப்படுவதாகவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.
Comments