பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் உபரிநீர் திறப்பு - கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து ஆறாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்து நேற்று மாலை பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியைத் தொட்டது.
105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையில் ஜூலை இறுதி வரை 100 அடி வரை மட்டுமே நீர் தேக்கலாம் என விதி உள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆறாயிரத்து 324 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து மதகுகள் வழியாகப் பவானி ஆற்றில் 6000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
Comments