கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா

0 5396
கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார்.

பெங்களூருவில் இதை அறிவித்த அவர், இன்று பிற்பகல் மாநில ஆளுநரை சந்தித்து தமது பதவி விலகல் கடிதத்தை அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளாக, கர்நாடகாவின் பாஜக முகமாக அறியப்பட்டவர் எடியூரப்பா. நான்காவது முறையாக கர்நாடக முதலமைச்சராக இருக்கும் அவர், இந்த முறை பதவியில் 2 ஆண்டுகளை இன்று நிறைவு செய்கிறார்.

2 ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் தாம் பதவி விலகுவதை எடியூரப்பா அறிவித்தார்.

கடந்த சில மாதங்களாக கர்நாடக பாஜகவில் எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு வலுத்து வந்தது. அவரது மகன் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவதாக கூறி சில அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் எடியூரப்பாவுக்கு எதிரான புகார்களுடன் டெல்லிக்கு படையெடுத்தனர்.

எனவே அவர் மாற்றப்படுவார் என யூகங்கள் வெளியான நிலையில், ராஜினாமா அறிவிப்பை எடியூரப்பா வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments