அரக்கோணம் அருகே, மாதாந்திர ரயில் பயணச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த கோரி போராட்டம்

0 2846
அரக்கோணம் அருகே, மாதாந்திர ரயில் பயணச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த கோரி போராட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, மாதாந்திர ரயில் பயணச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த கோரி 300-க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டதில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு நாள்தோறும் இயக்கப்படுகின்ற ஏலகிரி விரைவு ரயிலில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வேலைக்காக ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர்.

கொரோனா கட்டுபாடுகள் இருந்த சமயத்தில் ரத்து செய்யப்பட்ட மாதாந்திர ரயில் பயணச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த கோரி, அனவர்திகான் பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்தை நடத்திய ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க உறுதி அளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments