தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்
தமிழகத்தில் B.E., B.Tech. படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதையொட்டி, பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் இன்று முதல் https://www.tneaonline.org/ இணையதளத்தில் வரும் ஆகஸ்ட் 24 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தல், சான்றிதழ்களை பதிவேற்றுதல் என்ற அடிப்படையில் விண்ணப்பபதிவு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 25ஆம் தேதி ரேண்டம் எண் வெளியாகும். செப்டம்பர் 4-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். அக்டோபர் 12 முதல் 16 வரை துணைக் கலந்தாய்வு நடைபெற்று அக்டோபர் 20-க்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments