நாடாளுமன்றத்தில் அமளிகளுக்கு இடையே முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு
நாடாளுமன்றத்தில் பெகாஸஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் ஆகிய பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில் முக்கிய மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த வாரம் முழுவதும் மிகக் குறைந்த நேரமே மாநிலங்களவை இயங்கியது. மக்களவை அமளிகளால் தொடர்ந்து முடங்கியது. இன்னும் 14 நாட்கள் அலுவல்களே எஞ்சியுள்ள நிலையில் மத்திய அரசு 25 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பட்டியலிட்டுள்ளது.
இன்று கூச்சல் குழப்பம் நீடித்தாலும் கூட மசோதாக்களை நிறைவேற்றிவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வாரத்தில் குறைந்தது 6 மசோதாக்களை நிறைவேற்ற அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சில முக்கிய அரசாணைகள் மசோதாவாக தாக்கல் செய்யப்பட ஆறுவார கால அவகாசம் மட்டும் உள்ளது.
அவை காலாவதியாகிவிட்டால் மீண்டும் புதிய அரசாணைகள் பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
Comments