மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி டெல்லி பயணம்... எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கத் திட்டம்?
இன்று மாலை டெல்லி செல்லும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நாளை மறுநாள் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுகிறார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசின் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் பிரதமரிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவது குறித்தும் மம்தா பானர்ஜி பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments