நடிகை ஷில்பா ஷெட்டியிடம் மீண்டும் விசாரணை?

0 2079

நடிகை ஷில்பா ஷெட்டியிடம் மீண்டும் விசாரணை நடத்த மும்பை குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அவருடைய கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களை விநியோகம் செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக விசாரணையை விரிவுபடுத்தியுள்ள போலீசார் ஆபாசப் படத்தில் நடித்த நடிகை கெஹ்னா வசிஷ்ட் உள்ளிட்ட 3 பேருக்கு விசாரணையில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியிருந்தனர்.

நடிகையைத் தவிர இதர இரண்டு பேரும் கிரைம் பிராஞ்ச் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். ராஜ் குந்த்ராவின் நான்கு ஊழியர்கள் இவ்வழக்கில் சாட்சியாக மாறி வாக்குமூலம் தந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆபாசப் படங்கள் எடுக்கப்பட்டது எப்படி, அவை பணம் காய்க்கும் மரங்களாக மாற்றப்பட்டது எப்படி என்று அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments