எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றத் திட்டம் - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றி பரிந்துரைக்க இருப்பதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை காவல்துறையும் தன்னார்வர்களும் இணைந்து செயல்படுத்தி வரும் “காவல் கரங்கள்” அமைப்பு மூலம் மாநகரில் ஆதரவற்று வசித்து வந்த 127 வடமாநிலத்தவர்கள் மீட்கப்பட்டு, ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை எம்.ஜி.ஆர் செண்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை கும்பல் தமிழகத்தில் கைவரிசை காட்டுவதற்கு முன்பு நாடு முழுவதும் 16 மாநிலங்களில் எஸ்பிஐ வங்கியின் சுமார் 5 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
Comments