கட்டுக்கதைகளை கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிர்வாகத்திற்கு களங்கம் கற்பிக்க வேண்டாம் - எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் கண்டனம்

0 4834
கட்டுக்கதைகளை கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான நிர்வாகத்திற்கு களங்கம் கற்பிக்க வேண்டாம்

மிழக நிதிநிலைமையை சரிசெய்ய லாட்டரி சீட்டு விற்பனையை அனுமதிப்பது தொடர்பான சிந்தனை, அரசுக்கு இல்லை என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அவரது அறிக்கையில், தமிழக அரசின் ஆலோசனைகளிலோ, ஆய்வு கூட்டங்களிலோ லாட்டரி விற்பனை குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என உறுதிபட கூறியுள்ளார்‍. இதனால் லாட்டரி விற்பனை முயற்சி என உண்மைக்கு மாறான பொய் அறிக்கையை எதிர்க்கட்சி இ.பி.எஸ் வெளியிட்டுள்ளதாகக் கூறி அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்‍.

லாட்டரி சீட்டு தொடர்பாக கட்டுக்கதைகளை கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான நிர்வாகத்திற்கு களங்கம் கற்பிக்க வேண்டாம் என, எதிர்க்கட்சி தலைவரை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எச்சரித்துள்ளார்‍.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments