மழை, வெள்ளம், நிலச்சரிவு... மகாராஷ்டிரத்தில் பேரழிவு தொடரும் மீட்புப் பணிகள்

0 2317

காராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்த இடங்களில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ராய்காட் மாவட்டத்தில் நிலச்சரிவில் காணாமல் போனோரைத் தேடும் பணியும் மூன்றாம் நாளாக நடைபெற்றது.

மகாராஷ்டிரத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒருவாரக் காலமாகக் கனமழை பெய்ததால் கிருஷ்ணா ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்கிறது. சாங்லி மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றின் கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் ரப்பர் படகுகளின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் தேசியப் பேரிடர் இதுவரை 800 பேரை மீட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

ராய்காட் மாவட்டத்தின் மகத் என்னுமிடத்தில் மழை வெள்ளத்தால் ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளன. வீடுகள், சாலை, மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் சேதடைந்துள்ளன.

ராய்காட் மாவட்டத்தில் நிலச்சரிவால் பேரழிவுக்குள்ளான தாலியேவில் இதுவரை 43 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இடிபாடுகள் மற்றும் சேற்றில் இன்னும் 40 பேர் வரை சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுவதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments