ஹங்கேரியில் இளையோருக்கான உலகச் சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் பிரியா மாலிக் தங்கப்பதக்கம் பெற்றார்

0 3833
ஹங்கேரியில் இளையோருக்கான உலகச் சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் பிரியா மாலிக் தங்கப்பதக்கம் வென்றார்

ஹங்கேரியில் இளையோருக்கான உலகச் சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் பிரியா மாலிக் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

புடாபெஸ்ட் நகரில் 17 வயதுக்குட்பட்ட இளையோருக்கான உலகச் சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 73 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரியா மாலிக், பெலாரஸ் வீராங்கனையைத் தோற்கடித்துத் தங்கப் பதக்கம் பெற்றார்.

அவருக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரகலாத் ஜோசி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments