வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு
முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தமது பதவிக்காலத்தின்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது.
கடந்த 2016 தேர்தல் வேட்பு மனுவில் 2 கோடியே 51 லட்சமாகக் காட்டப்பட்ட அவரது சொத்து மதிப்பு, 2021 தேர்தலில் 8 கோடியே 62 லட்சமாகக் காட்டப்பட்டுள்ளது என்றும், இந்த 5 ஆண்டுகளில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 55 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்பையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments