18 -ஐ ஒருதலையாக காதலித்த 28 : திருமணத்துக்கு மறுத்த இளம்பெண் : ஆத்திரத்தில் தலையில் கல்லைப்போட்டுக் கொன்ற கொடூரம்

0 3366

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பலர் முன்னிலையில் திருமணத்துக்கு மறுத்த உறவுக்கார பெண்ணின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டான்.

முத்துப்பேட்டையைச் சேர்ந்த 18 வயதான மவுலிகா என்ற பாலிடெக்னிக் மாணவியை அவரது தூரத்து உறவினரான 28 வயதான சிவசங்கரன் என்பவன் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளான். திருமணம் செய்துகொடுக்க பெற்றோர் மறுத்த நிலையில், சிவசங்கரனைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என மாணவியும் பலர் முன்னிலையில் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

அதனை அவமானமாக உணர்ந்த சிவசங்கரன் நள்ளிரவு மவுலிகா தூங்கிக் கொண்டிருந்தபோது, அம்மிக்கல்லை அவர் தலையில் போட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளான். தப்பியோட முயன்ற அவனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments