பீகாரில் காதல் விவகாரத்தில் கொல்லப்பட்ட இளைஞர் உடல் கொன்றவரின் வீட்டு முன்னே வைத்து தகனம்

0 2661
பீகாரில் காதல் விவகாரத்தில் கொல்லப்பட்ட இளைஞர் உடல் கொன்றவரின் வீட்டு முன்னே வைத்துத் தகனம்

பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் கொல்லப்பட்ட இளைஞர் உடலைக் கொன்றவரின் வீட்டு முன்னே வைத்துத் தகனம் செய்தனர்.

காதலித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற இளைஞனைப் பெண்ணின் குடும்பத்தினரும் உறவினரும் அடித்து உதைத்ததுடன் மிகமோசமான முறையில் காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த இளைஞன் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள் கொன்றவரின் வீட்டைத் தாக்கியதுடன் அந்த வீட்டு முன்னே உடலைத் தீவைத்து எரித்தனர்.

கொலை தொடர்பாக வழக்குப் பதிந்த காவல்துறையினர், முதன்மையாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரைக் கைது செய்தனர். அவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதற்காக மூவரையும் கைது செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments