உத்தர பிரதேசத்தில் துப்பாக்கியுடன் செல்பி எடுக்கும் போது குண்டு பாய்ந்து புதுப்பெண் பலி

0 4615
உத்தர பிரதேசத்தில் துப்பாக்கியுடன் செல்பி எடுக்கும் போது குண்டு பாய்ந்து புதுப்பெண் பலி

உத்தர பிரதேசத்தில் துப்பாக்கியுடன் செல்பி எடுக்கும் போது குண்டு பாய்ந்து புதுப்பெண் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹர்டோயில் (Hardoi ) உள்ள தமது கணவர் வீட்டில் ராதிகா என்கிற இந்த 26 வயது பெண் குடும்பத்திற்கு சொந்தமான சிங்கிள் பேரல் துப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததாக அவரது மாமனார் தெரிவித்தார். படுகாயமடைந்த அவரை கணவன் வீட்டார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராதிகாவுக்கும் ஜூவல்லரி தொழில் செய்யும் ராஜேஷ் குப்தா என்பவருக்கும் கடந்த மே மாதம் தான் திருமணம் நடந்தது.

ராதிகாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது தந்தை ராகேஷ் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். துப்பாக்கியையும், ராதிகா எடுத்த செல்பி போட்டோவையும் கைப்பற்றிய போலீசார், முதற்கட்ட விசாரணையில், ராதிகாவின் உடலில் ஒரு குண்டு பாய்ந்தது மட்டுமே தெரிய வந்துள்ளதாகவும், கைகலப்பு நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments