பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 100 அடியை எட்டும் என எதிர்பார்ப்பு
பவானி ஆற்றின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியிலிருந்து ஏழாயிரம் கனஅடியாகக் குறைந்தது.
வட கேரளம் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நேற்று நீர்வரத்து 19 ஆயிரத்து 789 கன அடியாக இருந்தது. நேற்று முதல் மழை குறைந்ததால் இன்று காலை நீர்வரத்து ஏழாயிரத்து 284 கன அடியாகக் குறைந்தது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99 புள்ளி 7 அடியாகவும், நீர் இருப்பு 28 புள்ளி 5 டிஎம்சி ஆகவும் உள்ளது. இன்று மாலைக்குள் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையிலிருந்து நொடிக்குத் தொள்ளாயிரம் கன அடி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
Comments