ஒலிம்பிக்கில் இந்தியர்கள் இன்று..!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டன் பி.வி.சிந்து முதல் சுற்று ஆட்டத்தில் இஸ்ரேல் வீராங்கனையை வென்றுள்ளார். துடுப்புப் படகுப் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன், அரவிந்த் இணை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பெண்களுக்கான பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியின் தகுதிச் சுற்றில் இந்தியாவின் மனு பாக்கர், யசாஸ்வினி சிங் தேஸ்வால் ஆகியோர் பின்னடைந்ததால் பதக்கச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.
ஆண்களுக்கான பத்து மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் திவ்யான்ஸ் பன்வார், தீபக் குமார் ஆகியோர் பதக்கச் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறிவிட்டனர்.
துடுப்புப் படகுப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், அரவிந்த் இணை வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினர். மகளிருக்கான பேட்மின்டன் போட்டியில் ஜே பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து இஸ்ரேல் வீராங்கனையை வென்றார்.
டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, அங்கிதா ரைனா இணை முதல் சுற்றில் உக்ரைன் வீராங்கனைகளிடம் தோல்வியடைந்தது. ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டி இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஞானசேகரன் சத்தியன், ஹாங்காங் வீரரிடம் தோல்வியடைந்தார்.
டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மணிகா பத்ரா, உக்ரைன் வீராங்கனையை நான்குக்கு மூன்று என்கிற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மகளிருக்கான குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் மேரிகோம் டொமினிக்கன் குடியரசின் வீராங்கனையைத் தோற்கடித்துக் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் ஹாக்கிப் போட்டியில் ஏ பிரிவில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஏழுக்கு ஒன்று என்கிற கோல் கணக்கில் இந்திய அணியை வென்றது.
Comments