இந்திய மாலுமிகளுடன் வரும் கப்பல்களுக்கு சீனா அதிகாரப்பூர்வமற்ற தடை? 20 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்
சீனாவுக்கு வரும் வர்த்தக கப்பல்களில் இந்திய மாலுமிகள் இருக்க கூடாது என சீன அரசு அதிகாரபூர்வமற்ற தடையை விதித்துள்ளதால் 20 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்திய பணியாளர்கள் உள்ள கப்பல்களை தனது துறைமுகங்களில் நிறுத்தவும் சீனா தடை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய மாலுமிகளை அனுமதிக்காமல், தனது நாட்டில் உள்ள மாலுமிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் திட்டத்துடன் சீனா இந்த தந்திரத்தில் இறங்கி உள்ளது என அகில இந்திய மாலுமிகள் மற்றும் பொது பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கப்பல் போக்குவரத்து அமைச்சர், வெளியுறவு அமைச்சகம் மற்றும் கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநருக்கு இந்த சங்கம் கடிதம் அனுப்பி உள்ளது.
Comments