வட கர்நாடகாவில் தொடரும் கனமழை..! வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணி தீவிரம்
வட கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
சிக்கமகளூரு , ஷிவமொக்கா , பெலகாவி , உடுப்பி உட்பட சுமார் 13 மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மக்கள் வீடுகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே வெள்ளத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு வருகின்றனர்.
வட கர்நாடக பகுதிகளில், கனமழை, வெள்ளம் காரணமாக இந்த ஆண்டும் பல லட்சம் ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
Comments