தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வழக்கு; டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கு 6 மாதங்கள் சிறை
தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்காக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பிக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்காக, மெஹபூபாபாத் தொகுதியைச் சேர்ந்த டி.ஆர்.எஸ் கட்சியின் மக்களவை எம்.பி., மலோத்து கவிதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் மலோத்து கவிதா மீதான குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து அவருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
Comments