கனடாவில் ஓநாயிடம் சிக்கிய சிறுமியை தீரமுடன் போராடி காப்பாற்றிய செல்லபிராணி..! சிசிடிவி காட்சி வெளியீடு

0 6518

னடாவில் 10வயது சிறுமியை ஓநாயிடம் இருந்து அவரது செல்ல நாய் தீரமுடன் போராடி காப்பாற்றிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

டொரண்டோ பகுதியை சேர்ந்த 10வயது சிறுமியான Lily Kwan தனது செல்ல நாயுடன் வெளியில் சென்ற போது திடீரென வந்த ஓநாய் ஒன்று சிறுமியை துரத்த தொடங்கியது.

இதனால் பயந்து போன அந்த சிறுமி அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் அவரது நாய், ஓநாயை எதிர்த்து தீரமுடன் போராடியது. அந்த காட்சி அருகில் இருந்த வீட்டின் சிசிடிவி காமிராவில் பதிவானது.

ஓநாய் கடித்ததில் நாய்க்கு காயம் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக Lily Kwan தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments