அமெரிக்காவில் கொரோனாவை தொடர்ந்து வேகமாக பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று
கொரோனாவை தொடர்ந்து அமெரிக்காவில் தற்போது வேகமாக பரவி வரும் Candida auris பூஞ்சை தொற்று மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்ப்பு சக்தி இல்லையெனில் இந்த பூஞ்சை தொற்று ரத்த ஓட்டத்தை பாதித்து மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது என கூறப்படுகிறது. வாஷிங்டனில் 101 பேருக்கும் டெக்சாசில் 22 பேருக்கும் இந்த நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல் மற்றும் குளிர் ஆகியவை கேண்டிடா ஆரிஸ் நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறிகளாகும். நோய் பாதித்தவர்களுக்கு ஆன்டிபயாடிக் சிகிச்சை அளித்தபோதும் உடல்நிலை சீரடையவில்லை என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
Comments