ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானுக்கு ரூ.1 கோடி பரிசு

0 5030

ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீரா பாய் சானுக்கு மணிப்பூர் முதலமைச்சர் ஒரு கோடி ரூபாயை பரிசுத் தொகையாக அறிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவில் மணிப்பூர் வீராங்கனை மீரா பாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க பட்டியலை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் மீரா பாய் சானுக்கு மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் 1 கோடி ரூபாயை பரிசுத் தொகையாக அறிவித்துள்ளார். மேலும் மீரா பாய் சானுவுடன் காணொலி மூலம் பேசிக் கொண்ட வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதேபோல் இந்திய ஒலிம்பிக் சங்கமும் மீரா பாய் சானுக்கு 40 லட்ச ரூபாயை பரிசுத் தொகையாக அறிவித்து உள்ளது. மேலும் அவரது பயிற்சியாளர் விஜய் சர்மாவுக்கும் 10 லட்ச ரூபாயை பரிசாக அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments