இந்தியாவைக் கடந்து முதன்முறையாக வங்கதேசம் செல்கிறது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்
இந்தியாவைக் கடந்து முதன்முறையாக ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் வங்கதேசத்திற்கு செல்ல இருக்கிறது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் அண்டை நாடுகளுக்கு பயணிப்பது இதுவே முதல் முறை என்று தெரிவித்துள்ளது. 200 மெட்ரிக் டன் மருத்துவப் பிராணவாயுவை வங்கதேசத்தின் பேனாபோலி என்ற இடத்திற்கு எடுத்துச் செல்வதற்காக தென்கிழக்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் சக்ரதர்பூர் பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 10 கொள்கலன்களில் 200 மெட்ரிக் டன் மருத்துவப் பிராணவாயுவை நிரப்பிய ரயில் வங்கதேசம் செல்ல உள்ளது.
Comments