டெல்லியில் நாளை முதல் திரையரங்குகள், மால்கள் திறக்க அனுமதி

0 2841

டெல்லியில் நாளை முதல் திரையரங்குகள், மால்கள் போன்றவற்றை 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.

மெட்ரோ ரயில் சேவை 100 சதவீதப் பயணிகளுடன் இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதே போல் பேருந்துகளிலும் 100 சதவீதப் பயணிகளை ஏற்றிச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கான அதிகபட்ச பார்வையாளர்கள் எண்ணிக்கையும் 50 லிருந்து 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று வார இறுதி நாளில் சந்தைகளில் பெரும் திரளாக மக்கள் திரண்டனர். முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கோவிட் கால நடைமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments