இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: கொழும்புவில் இன்றிரவு 7 மணிக்கு தொடக்கம்
இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 20ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி முதல் 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றி உள்ளது.
இலங்கை அணி 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகள் இடையேயான முதலாவது 20ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்றிரவு 7 மணி அளவில் நடைபெறுகிறது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை வென்ற உற்சாகத்தில் இந்திய அணியும், 20ஓவர் கிரிக்கெட் தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இலங்கை அணியும் உள்ளதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments