தாலிகட்டும் நேரத்திலும் கடமை; மண்டபத்தில் மடிக்கணினியுடன் மணமகன்..! Work From Home சோதனைகள்

0 23424

காராஷ்டிராவில் தாலி கட்டும் நேரத்திலும் மணமகன், கையில் கணினியுடன் வேலையில் கவனம் செலுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா பாதிப்பால் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரியுமாறு கேட்டுக் கொண்டுள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிராவில் மணமேடையில் தாலி கட்டும் நேரத்திலும் கையில் கணினியுடன் மணமகன் அமர்ந்து பணியில் ஈடுபட்டார்.

மற்றொரு புறத்தில் அமர்ந்திருந்த மணமகள் இதனைக் கண்டதும் சிரிப்பு தாளாமல் அமர்ந்திருந்ததை அங்கிருந்த வீடியோ ஒன்று பதிவு செய்தது.

பின்னர் மணமகன் பணி முடிந்ததும் கணினியை மற்றொரு நபரிடம் ஒப்படைத்து விட்டு திருமணத்திற்கு தயாரானார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments