எலான் மஸ்க் போட்ட லைக்... 16 மணி நேரத்தில் சென்னை நிறுவனத்துக்கு கிடைத்த 7.5 கோடி முதலீடு!

0 10055
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரில் போட்ட ஒரே ஒரு Like ஆல் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் தங்கள் நிறுவனத்திற்கு முதலீடாக கிடைத்துள்ளதாக கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரில் போட்ட ஒரே ஒரு Like ஆல் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் தங்கள் நிறுவனத்திற்கு முதலீடாக கிடைத்துள்ளதாக கருடா ஏரோ ஸ்பேஸ்  நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்ரோன் மூலம் தண்ணீரை தெளித்து சோலார் பேனல்கள், தொழிற்சாலைகளிலுள்ள உயர்ந்த கோபுரங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணியில் கருடா ஏரோ ஸ்பேஸ்  நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் சிங்கப்பூரில் 1 லட்சத்து 22 ஆயிரம்  சோலார் பேனல்கள் தங்கள் ட்ரோன் மூலம் பராமரிக்கப்படவுள்ளதாக ட்வீட் செய்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனர், அதில் டெஸ்லா காரின் தலைமை செயல் அதிகாரியும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் யையும்  டேக் செய்துள்ளார்.

அந்தப் பதிவுக்கு எலான் மஸ்க் லைக் செய்யவே, அந்த ட்வீட் லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கவனம் பெறப்பட்டு, லண்டனை சேர்ந்த நிறுவனம் 1 லட்சம் அமெரிக்க டாலரை தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக, கருடா ஏரோ ஸ்பேஸ்  நிறுவனர் அக்னீஸ்வர் ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments