கணவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு எழுந்து நடமாட முடியாமல் இருப்பதால் கடினமான வயல் வேலைகளை செய்யும் மூதாட்டி..

0 10262
கணவன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூர் அருகே கடினமான வயல் வேலைகளை மூதாட்டி ஒருவர் செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

கணவன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூர் அருகே கடினமான வயல் வேலைகளை மூதாட்டி ஒருவர் செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

சக்கரசாமந்தம் கிராமத்தை சேர்ந்த  மணிமேகலை-அய்யாதுரை தம்பதி, வேளாண் தொழிலை பிரதானமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அய்யாதுரைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக  எழுந்து நடமாட முடியாமல் இருப்பதால், வரப்பு வெட்டுதல், விளை நிலத்தை சமன்படுத்துதல் போன்ற கடினமான வேலைகளை 60 வயதுடைய அவரது மனைவி மணிமேகலை செய்து வருகிறார். வயதையும் பொருட்படுத்தாமல் மண்வெட்டியுடன் வயலுக்கு செல்லும் அவர், ஆண்கள் செய்யும் அனைத்து வேலைகளை செய்து வருகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments