உடல்நிலை பாதிக்கப்பட்ட தந்தை, பாட்டியை பராமரிக்கும் 12 வயது சிறுவன்..

0 4026
தென்காசி மாவட்டம் கடையத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தை மற்றும் பாட்டியை 12 வயது சிறுவன் பராமரித்து வருகிறான்.

தென்காசி மாவட்டம் கடையத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தை மற்றும் பாட்டியை 12 வயது சிறுவன் பராமரித்து வருகிறான்.

சிவசக்தி என்ற சிறுவனின் தந்தையான குமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடத்தில் இருந்து விழுந்ததால், முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் உழன்று வருகிறார்.

சிறுவனின் தாயும் பிரிந்து சென்றதால், சிவசக்தியையும், குமாரையும் பாட்டி சிவகாமி பராமரித்து வந்தார். வீட்டுவேலை செய்து வந்த சிவகாமியும், தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் வீட்டுவாடகை, மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாததோடு, சிறுவனின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது. சிவசக்திக்கு தன்னார்வலர்கள் உதவ வேண்டும் என அந்த பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments