பூமியை நெருங்கி வரும் பெரிய குறுங்கோள் ; குறுங்கோள்களை கண்காணித்து வரும் விஞ்ஞானிகள்
4 கால்பந்து மைதானங்கள் அளவுக்கு பெரிய குறுங்கோள் ஒன்று, நாளை இரவு 11.21 மணிக்கு பூமி அருகே கடந்து செல்ல உள்ளது.
பூமிக்கு அருகே நகர்ந்து செல்லக்கூடிய, 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, கொஞ்சம் பெரிய சைஸ் குறுங்கோள்களை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
அதில் ஆயிரத்து 45 குறுங்கோள்கள் ஆபத்தானவையாக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்நிலையில், '2008 G20' என்ற குறுங்கோள் ஒன்று, நாளை இரவு 11.21 மணியளவில் பூமி அருகே கடந்து செல்ல உள்ளது.
ஆனால் அது பூமி மீது மோதிவிடுமோ என நாம் கவலைப்பட அவசியமில்லை என விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். 97 மீட்டர் அகலம், 230 மீட்டர் நீளம் கொண்ட அந்த குறுங்கோள், மணிக்கு 29 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில், பூமியில் இருந்து 45 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் கடந்து செல்ல உள்ளது.
இதே குறுங்கோள், 1935ஆம் ஆண்டு 19 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலும், 1977ஆம் ஆண்டு 29 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலும் கடந்து சென்றதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments