CISCE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு ; தேர்வு இன்றி மதிப்பீட்டு அளவுகோல்களின் படி தேர்ச்சி

0 3367
CISCE 10&12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

 ICSE எனப்படும் 10 ஆம் வகுப்பு மற்றும் ISC எனப்படும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. கொரோனா காரணமாக இந்த ஆண்டு இந்த இரண்டு வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை.

அதற்குப் பதிலாக மதிப்பீட்டு அளவுகோல்களின் படி மதிப்பெண் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.cisce.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

குறுஞ்செய்தி வாயிலாகவும் முடிவுகளை அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்ச்சி முடிவுகளை அறிந்து கொள்ள சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

10 ஆம் வகுப்பில் 99 புள்ளி 98 சதவிகிதம் பேரும், 12 ஆம் வகுப்பில் 99 புள்ளி 76 சதவிகிதம் பேரும் வெற்றி பெற்றுள்ளனர். CISCE எனப்படும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில், அதன் வரலாற்றில் முதன்முறையாக இந்த வகுப்புகளுக்கு தேர்வு நடத்தாமல் முடிவுகளை அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments