மின்சார கார்கள் மீதான இறக்குமதி வரி இந்தியாவில் மிகவும் அதிகம் - எலான் மஸ்க்
இந்திய சந்தைக்கு டெஸ்லா கார்களை விற்பனைக்கு கொண்டுவர விரும்புவதாக பதிலளித்துள்ள எலான் மஸ்க், பிற பெரிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இறக்குமதி வரிகள் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் என குறிப்பிட்டுள்ளார்.
கூடிய விரைவில் டெஸ்லா கார்களை, இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கும் ட்விட்டர் பதிவுக்கு, எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். அதில், தூய எரிசக்தி வாகனங்களும், பெட்ரோல், டீசல் வாகனங்களும் பாகுபாடின்றி ஒரே தரத்தில் வைத்து பார்க்கப்படுவது, இந்தியாவின் பருவநிலை தொடர்பான இலக்குகளுக்கு முற்றிலும் உகந்ததாக இல்லை என்றும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
இந்தியாவில் இந்த ஆண்டு விற்பனையை தொடங்க திட்டமிட்டுள்ள டெஸ்லா, முழுமையாக அசெம்பிள் செய்யப்பட்ட மின்சார கார்கள் மீதான இறக்குமதி வரிகளை 40 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கும், நிதி ஆயோக்கிற்கும் கடிதம் எழுதியுள்ளது.
Comments