டிவிட்டர் இந்திய நிர்வாகி விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு
டிவிட்டர் இந்தியா நிறுவன மேலாண் இயக்குனர் நேரில் ஆஜராவதில் இருந்து கர்நாடக உயர்நீதிமன்றம் விலக்கு அளித்தது.
சமூக நல்லிணக்கத்தை சீரழிக்கும் விதமாக வீடியோ பதிவுகளை வெளியிட்டதாக காசியாபாத்தில் தொடரப்பட்ட வழக்கில் டிவிட்டர் இந்தியா நிர்வாகி மணிஷ் மகேஸ்வரிக்கு உத்தரப்பிரதேச காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் விலக்குக் கோரி மணிஷ் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருடைய கோரிக்கையை ஏற்று கர்நாடக உயர்நீதிமன்றம் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது.
மணிஷை காணொலி வாயிலாக அல்லது அவர் வீட்டில் போய் விசாரிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
Comments