பெண்ணைத் திருமணம் செய்வதாக ஏமாற்றிய நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை

0 2313
பெண்ணைத் திருமணம் செய்வதாக ஏமாற்றிய நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை

கடலூர் மாவட்டத்தில் பெண்ணைக் காதலித்து கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

விருத்தாச்சலம் அருகே உள்ள மணலூரைச் சேர்ந்த பிரபு என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து கர்ப்பமாக்கியுள்ளார்.

வேலையில்லாமல் இருந்த பிரபு, வேலை கிடைத்ததும் திருமணம் செய்வதாகக் கூறியதால் அந்தப் பெண் கர்ப்பத்தைக் கலைத்துள்ளார். அதன் பின் பிரபுவுக்கு நீதிமன்றத்தில் பணி கிடைத்ததும் திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதனால் அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆனாலும் பிரபு தொடர்ந்து திருமணத்திற்கு மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததால் அந்தப் பெண் கடந்த 2017ம் ஆண்டு விருத்தாச்சலம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பான வழக்கு கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் பிரபுவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரின் பெற்றோர் அன்பழகன், ராஜேஸ்வரிக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments