லடாக்,உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைக் குறிவைத்து விமானப்படைத்தளங்களை அமைக்கும் முயற்சியில் சீனா
லடாக்,உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைக் குறிவைத்து எல்லைப் பகுதியில் 16 விமானப்படைத்தளங்களை அமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.
இந்திய எல்லையை ஒட்டிய 16 இடங்களில் இருக்கும் விமான தளங்களை விரிவாக்கம் செய்யவும் புதிய விமான தளங்களை அமைக்கவும் சீனா உள்கட்டமைப்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கான், ரஷ்யா உள்ளிட்ட அண்டை நாடுகளை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் இந்த விமானப் படைத்தளங்கள் அமைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய எல்லைக்கு மிகவும் அருகே உள்ள மூன்று விமானப் படைத்தளங்களில் சீனா அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இதனிடையே சீனாவின் ஏழு விமானப் படைத்தளங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments