கர்நாடகத்தில் கனமழை வெள்ளப்பெருக்கு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - ரயில் போக்குவரத்து பாதிப்பு
கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்களில் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் சிவமோகா தார்வார்ட் , ஹவேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளம் அதிகரித்துள்ளது.
கிருஷ்ணா, காவிரி, துங்கபத்திரா, பீமா , கபிலா ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுகிறது. வெள்ளத்தில் ஏராளமான கிராமங்கள் மூழ்கியுள்ளன.
தாழ்வானப் பகுதிகளில் வசிப்போரை மீட்புப் படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியுள்ளனர். வெள்ளப் பெருக்கு காரணமாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments