கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் படிப்படியாக பள்ளிகளைத் திறக்கலாம் - எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் குலேரியா
கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் நாடு முழுவதும் படிப்படியாக பள்ளிகளைத் திறக்கலாம் என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார்.
சரியான கண்காணிப்புடன் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளி வகுப்புகளில் மாணவர்கள் நேரடியாகக் கல்வியைக் கற்பது கல்வியாளர் கண்ணோட்டத்தில் முக்கியமானது என்பதுடன் ஒரு மாணவரின் தனிப்பட்ட குணத்தையும் பழக்க வழக்கத்தையும் அது தீர்மானிப்பதாகவும் குலேரியா தெரிவித்துள்ளார்.
Comments